Header Ads



ஆசிரியை - ஆசிரியர் மோதல், பாராளுமன்றத்திற்கு வந்த விவகாரம்


எம்பிலிபிட்டியவில் ஆசிரியை ஒருவரை தாக்கிய ஆசிரியர் ஒருவர் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதுரி கங்கானி தெரிவித்துள்ளார்.


எம்பிலிபிட்டிய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவர் அதே பாடசாலையில் பணிபுரியும் மற்றுமொரு ஆசிரியர் ஒருவரால் நேற்றையதினம்(07.03.2025) தாக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சதுரி கங்கானி இன்றையதினம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.


பாடசாலையின் பெண் அதிபரின் முன்னிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தாக்குதலுக்குள்ளான ஆசிரியை தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதனையடுத்து, உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்த சம்பவம் குறித்து இன்று காலை தனக்கு தெரியவந்ததாக கூறினார்.


மேலும், இது தொடர்பில் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டு நிச்சயமாக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.