Header Ads



தாயாரை கொலைசெய்த மகன்


தெமட்டகொடையில் போதைப்பொருள் வாங்க பணம் கொடுக்க மறுத்ததால், 68 வயதுடைய தாயாரை மகன் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பாதிக்கப்பட்ட தாய் தனது மகன் மற்றும் மூத்த சகோதரியுடன் வசித்து வந்தார்.


46 வயதான மகன் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்ததாகவும், அவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.