கொழும்பு பல்லைகக்கழகத்திலும் சித்திரவதைக்கூடம் இருந்ததா..?
அப்போதைய “ராவய செய்தித்தாள்“ மூலம் படலந்த சித்திரவதை மையம் பற்றிய தகவல்களை நந்தன வீரரத்ன, வெளிப்படுத்தியிருந்தார்.
இது தொடர்பில் இன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி பொதுமக்களுக்கு தெரியாத பல தகவல்களை வெளிப்படுத்தினார்.
நந்தன ராவயவின் வெளிப்பாடுகள்தான் படலந்தவில் நடந்த உண்மையான குற்றங்களைப் பற்றி அறிய அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவைத் தூண்டியதாக இன்றைய ஊடக சந்திப்பில் நந்தன வீரரத்ன விளக்கமளித்துள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“படலந்த சித்திரவதைக்கூடம் பற்றிய புத்தகத்தை முப்பது வருடங்களுக்கு முன்னரே நான் எழுத்தியிருந்தேன்.
இது தொடர்பான அறிக்கை அனைத்தும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்ணடாரநாயக்கவிடம் இருந்தது.
ஆனால் அவர் இது தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சந்திரிக்கா அதனை ஒரெகொல்லவில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதனை மறைத்துவிட்டார்.
பின்னர் 1999ஆம் ஆண்டு மீள வெளிக்கொண்டுவந்தார். அப்போது எதிர்கட்சியில் இருந்த ரணில் விக்ரமசிங்கவை அதை வைத்து பகிரங்கமாக மிரட்டினார்.
ரணிலிடம் விசாரணை
இது தொடர்பில் ரணிலிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டபோது இருந்த ஒருவர்தான் கிரிஸ்தோப்பர் வின்சன் பெர்னான்டோ.
அவரிடமும் இத தொடர்பில் இரகசியமாக சாட்சியங்கள் பெறப்பட்டன. இதன்போது அங்கு இருந்த அனைத்து ஊடகவியளாளர்களும் பகிரங்கமாக வெளியேற்றப்பட்டனர்.
அவர் அளித்த சாட்சியங்களில் அரைவாசி கூட பட்டலந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்வில்லை.
இது தொடர்பில் அப்போது விசாரணைக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் உள்ளவர்கள் ரணிலின் எதிர்காலத்துக்காக இதை மறைத்துள்ளனனர்.
இது அப்போது விசாரணை செய்தவர்களால் தானாக முன்னெடுக்கப்பட்ட ஒன்று அல்ல. ஜனநாயகம் பற்றி இப்போது வெளியில் வந்து கதைக்கும் சந்திர்க்கா பண்டாரநாயக்கவின் அழுத்தத்தால் இடம்பெற்ற ஒன்று. அவரே விசாரணைக்கான நீதியை மாற்றியமைத்தார்.
இந்நத சந்தர்பத்திலேயே வின்சன் பெர்னான்டோ அகால மரணமடைந்தார். இது எங்களுக்கு மிக முக்கிய மறக்க முடியாத நாள்.
இது ரணில் சாட்சியம் அளிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பாக இடம்பெற்ற ஒன்று.
இது தொடர்பில் ரணில் நீமிமன்றில் சாட்சியிம் வழங்கும் போது ஒரு சட்டத்தரணிகூட கேள்வி எழுப்பவில்லை.
படலந்த என்பது ஒரு பாதாள வதைக்கூடம். இதில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும் கூட பலிவாங்கப்பட்டனர்.
அப்போது நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சித்திரவதைகூடங்கள் நாடு முழுவதும் இருந்தன.
அதில் இன்று நாங்கள் தேடுவது கொழும்பு பல்கலையில் இருந்த ஒரு சித்திரவதைக்கூடத்தினைப்பற்றி.
உலக வரலாற்றில் பல்கலைக்குள் சித்திரவதைக்கூடம் இருந்தது என்றால் அது கொழும்பு பல்கலையில் மாத்திரமே
இங்கு சித்திரவதைக்குள்ளாகி தப்பித்த மூன்றுபோர் இது தொடர்பான தகவல்களை எமக்கு வழங்கினர்.
அதில் ஒருவர்தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினபாட்டலி சம்பிக்க ரணவக்க.
அவர் எம்மிடம் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் பேச விரும்பவிவ்லை. ஆனால் அவற்றை விசாரித்தால் படலந்த போல் ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்ட பல கொடூரங்கள் அம்பலமாகும்.
இந்த கொடூரமான இராச்சியத்தை முன்னெடுத்தவர்களிடம் இருந்து எம் நாட்டு மக்களுக்கு சமாதானத்தை தேசிய மக்கள்சக்தி பெற்றுக்கொடுக்கவேண்டும். அமைதிக்காக்க தேவையில்லை.
இலங்கையில் இந்திய இராணுவத்தினர் இருந்தபோது இடம்பெற்ற யுத்தக்குற்றமே மிகப்பெரிய குற்றச்செயலாகும்.
1987- 1990 வரை இந்திய இராணுவம் இலங்கையில் இருந்தபோது வடக்கு - கிழக்கில் இருந்த முதுமை பெண்ணுக்கு கூட பாதுகாப்பு இல்லாத நிலை காணப்பட்டது.
அப்போதைய அரசாங்கமே தீவிரவாதத்தை வரவேற்றது.அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜேவர்த்தனவே இந்திய இராணுவத்திற்கு அழைப்பிதழை அனுப்பினார்.
ஜே.ஆர் ஜேவர்த்தனவின் ஆட்சியில் சற்று சரிவு ஏற்பட்டபோது இந்திய இராணுவத்தை தெற்கிலும் முகாமிடுமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை இந்திய இராணுவம் கடிதம் மூலம் கோரியது.
அந்த கடிதத்தை ஜே.ஆர் ஜேவர்த்தன வழங்கினார். இது இப்போது டெல்லியில் உள்ளது.” என்றார்.
Post a Comment