Header Ads



பாராளுனமன்றத்தில் பட்டலந்த அறிக்கை - களத்தில் இறங்கியுள்ள அநுரகுமார


பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சற்றுமுன்னர் (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த அறிக்கையை சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சபையில் சமர்ப்பித்தார்.


பட்டலந்த அறிக்கையை கையாள்வது குறித்து ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை கொள்கை தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். 


அதன்படி, இந்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. 


இந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளை முன்மொழிய ஒரு விசேட குழுவை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். 


சம்பந்தப்பட்ட அறிக்கை தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நடத்தப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.