Header Ads



முஸ்லீம் காங்கிரஸுடன், தமிழரசுக்கட்சி ஒப்பந்தம் - பிள்ளையான்


வடக்கு அரசியல்வாதிகளின் சித்தாந்த போக்கை மாற்றியமைத்து அவர்களுக்கு கிழக்கிலும் ஒரு அரசியல் நிலைபாடு காணப்படுகிறது என்ற விடயத்தை பாடமாக புகட்டவேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.


கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் மட்டக்களப்பு தொகுதி உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.


மேலும், கடந்த 14 ஆம் திகதி முஸ்லீம் காங்கிரஸுடன் இலங்கை தமிழரசுக்கட்சி ஒரு ஒப்பந்தத்தை செய்திருந்தது என இதன்போது சிவனேசத்துரை சந்திரகாந்தன் கூறியுள்ளார்.


அவ்வாறெனில் கிழக்கு மக்களுக்கு தெரியாமல் வடக்கின் தலைவர்கள் இரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளமை இதன்மூலம் அம்பலமாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.