நீர்கொழும்பு தேர்தல் கள நிலவரம்
இம்முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நீர்கொழும்பு மாநகர சபைக்கு 09 கட்சிகளும் 07 சுயேட்சைக் குழுக்களும் போட்டி இடுகின்றன.
11 கட்சிகளும் 09 சுயேட்சைக் குழுக்களுமாக 20 வேட்புமனுக்களை கையளித்த போதும் அதில் நான்கு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 16 வேட்புமனுக்களே ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஐக்கிய தேசிய கட்சி, சர்வஜன அதிகாரம் கட்சி மற்றும் இரண்டு சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் போராட்ட முன்னணி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட 9 கட்சிகளும் 7 சுயேட்சைக் குழுக்களும் களத்தில் உள்ளன.
நீர்கொழும்பு மாநகர சபைக்கு இம்முறை 816 பேர் போட்டியிடுகின்றனர். அதில் வட்டார அடிப்படையில் 29 உறுப்பினர்களும் பட்டியல் மூலம் 19 பேர்களுமாக மொத்தம் 48 பேர் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
இம் முறை தேர்தலில் நீர்கொழும்பில் 117,756 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
Post a Comment