Header Ads



டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள விலங்குகள்

 
விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இமாலயன் பிரவுன் கரடி, மூன்று ஜோடி பாலைவனக் கீரி (Meerkat) மற்றும் ஒரு ஜோடி புள்ளிக் கழுதைப்புலிகள் (Spotted Hyena) இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 


இந்த விலங்குகள் கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. 


இவ்வாறு கொண்டுவரப்பட்ட விலங்குகள் ஒரு மாதத்திற்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் ஹம்பாந்தோட்டையில் உள்ள ரிதியகம சபாரி பூங்காவிற்குள் விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


இமாலயன் பிரவுன் கரடி, மூன்று ஜோடி பாலைவனக் கீரி (Meerkat) ஆகியன தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் விடுவிக்கப்படும் என்றும், ஹம்பாந்தோட்டையில் உள்ள ரிதியகம சபாரி பூங்காவிற்குள் ஒரு ஜோடி புள்ளிக் கழுதைப்புலிகள் (Spotted Hyena) விடுவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 


அதன்படி, மார்ச் 25 முதல் இந்த விலங்குகள் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 


இந்த இமாலயன் பிரவுன் கரடிகள் பெரும்பாலும் இமயமலை மலைத்தொடர், வட இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், சீனா மற்றும் திபெத்தில் வாழ்கின்றன. 


பாலைவனக் கீரி (Meerkat) தென்னாப்பிரிக்கா, மொசாம்பிக், சிம்பாப்வே மற்றும் போட்ஸ்வானாவில் வறண்ட புல்வெளிகளில் வாழ்கின்றன. 


இதற்கிடையில், புள்ளிக் கழுதைப்புலிகள் (Spotted Hyena) ஆப்பிரிக்காவின் சவானா புல்வெளிகளில் வாழ்வதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.