ஈரான் போர் தொடுக்காது - யாரேனும் அச்சுறுத்தினால், தக்க பதிலடி கொடுப்போம்
ஈரான் போர் தொடுக்காது. அதே நேரத்தில் யாரேனும் எங்களை அச்சுறுத்தினால் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் பாதுகாப்புப் படையின் தலைவர் ஹொசைன் சலாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சி படைக்கு ஈரான் ஆதரவு தரக்கூடாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
ஏமனில் அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கான உத்தரவை ட்ரம்ப் பிறப்பித்தார். இது குறித்து அவர் சமூக வலைதள பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாக சொல்லி இதனை ஹவுதி கிளர்ச்சிப் படையும் உறுதி செய்தது.
ஈரான் போர் தொடுக்காது. ஆனால், யாரேனும் அச்சுறுத்தினால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். ஏமன் நாட்டின் பிரதிநிதியாக உள்ள ஹவுதி கிளர்ச்சிப் படை தன்னிச்சையாக செயல்படுகிறது. அதன் உத்தி மற்றும் செயல்பாடும் அவர்களை சார்ந்தது என ஹொசைன் சலாமி தெரிவித்துள்ளார்.
Post a Comment