இந்த வாய்ப்பை தந்த இறைவனுக்கு நன்றிகள்
நேற்று சுபேதா தம்பதினர்கள் ரமலானுக்கு புத்தாடைகள் வாங்க கடைக்கு சென்றபொழுது , சுபேதாவிற்க்கு தலைச்சுற்றல் வந்து வாந்தி எடுத்து கடையில் மயக்கம் போட்டு விழுந்து விட்டார் .தொடர்ந்து 19 நாட்களாக நோன்பு இருப்பதால் மயக்கம் உடல்சோர்வு வந்து விட்டதாக என்னிடம் அழைத்து வந்தார்கள்
பரிசோதனை செய்து பார்த்தபொழுது எனக்கு மாற்றம் தெரிந்தது .மாதவிடாய் சரியாக வருகிறதா என்று கேட்டவுடன் ,அது எல்லாம் சரியாக நான் கணக்கு வைத்துகொள்ளவில்லை அதற்க்கு எல்லாம் வாய்ப்பு இல்லை டாக்டர் நோன்பு இருப்பதால் வந்த உடல்சோர்வு என்று விரக்தியுடன் சொன்னார்கள்
சுபேதா வின் விரக்திக்கு காரணத்தை நன்கு அறிவேன் .38 வயதாகும் சுபேதாவிற்க்கு திருமணமாகி 14 வருடம் ஆகிறது & குழந்தைக்கான அத்தனை மருத்துவ முயற்ச்சிகளும் எடுத்து பலன் இல்லை
இரண்டு வருடங்களுக்கு முன்பு நான்தான் இனி மருத்துவசிக்கி்ச்சை எதுவும் வேண்டாம் இதற்க்குமேல் உங்களால் பொருளாதார பின்னடைவை தாங்கமுடியாது இறைவனிடம் விட்டு விடுங்கள் என்று அனுப்பிவைத்தேன்
நேற்று Urine pregnancy test பார்க்கலாம் என்றவுடன் அய்யோ டாக்டர் அது எல்லாம் வேண்டாம் ,கடந்த 14 வருடங்களில் 100 தடவைக்கு மேல் அந்த கார்டில் நெகடிவ் என்று பார்த்து விட்டோம் அதை எல்லாம் மறந்து நிம்மதியாக இப்பொழுது இருக்கிறோம் என்றார்கள்
சரி ஸ்கேன் செய்து பார்க்கலாம் தண்ணீர் குடியுங்கள் என்றேன் , நான் நோன்பு இருக்கிறேன் தண்ணீர்குடிக்க முடியாது என்று மறுத்து விட்டார் கட்டாயம் ஸ்கேன் எடுக்கவேண்டும் என்றால் இரவு நோன்பு திறந்தவுடன் வருகிறோம் என்றார்கள் ##இந்த மயக்கமான நிலையில் வீட்டுக்கு செல்வது சரியல்ல என்று தண்ணீர் குடிக்காமல் Trans vaginal scan செய்து பார்பது நல்லது என்று அவர்களை சம்மதிக்க வைத்தேன்
நான் நினைத்தது சரியாகதான் இருந்தது,ஆம் சுபேதா கர்ப்பபையில் 5 வார குழந்தையின் கரு & இதய துடிப்புடன் இருந்ததை அவர்களிடம் காண்பித்த பொழுது இருவரும் நம்பவில்லை
இருவரும் பயங்கர அழுகை & சந்தோச கண்ணீருடன் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என்றார்கள் ##
கடந்த இரண்டு வருடங்களாக நான் எந்த மருத்துவ சிக்கிச்சையும் உங்களுக்கு அளிக்கவில்லை & இறைவனின் சிக்கிச்சையால் இது நடைபெற்று உள்ளது என்றேன்
இரண்டு வருடங்களுக்கு முன்பு குழந்தையின்மைக்கான மருத்துவ சிக்கிச்சை போதும் என்று எங்களை ஆற்றுப்படுத்தி அனுப்பி வைத்தீர்கள் அதற்க்கு பிறகு நாங்கள் இனி குழந்தை பற்றி நினைக்கவேண்டாம் நாம் இருவரும் சந்தோசமாக வாழ்க்கை நடத்துவோம் என்ற முடிவை எடுத்து இன்று வரை நிம்மதியாக வாழ்கிறோம்
மயக்கம் வந்தும் நோன்பை முறிக்காத சுபேதாவிற்க்கு இறைவன் பெரிய பரிசை தந்து இருக்கிறான்
இன்று என்னை மீண்டும் சந்தித்து எனக்கு புத்தாடை பரிசு கொடுத்து கண்ணீருடன் நன்றி பாராட்டி மனதை நெகிழ வைத்தார்கள்
இந்த வாய்ப்பை தந்த மருத்துவதுறைக்கும் & இறைவனுக்கும் நன்றிகள் 💖💖💖
டாக்டர் ரொஹையா MDDGO
துணைப்பொதுசெயலாளர்
Post a Comment