இம்தியாஸ் குறித்து சிங்கள, ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்
இதனை தனிநபர் ஒருவரது பதவி விலகலாக நாங்கள் பார்க்காததால் தான், அப்படியொரு பதிவினை இட்டோம். கிராமியப் பேச்சு வழக்கில் கூறுவதானால் இது ஐக்கிய மக்கள் சக்திக்கு புதைகுழி விளங்க ஆரம்பித்துள்ளதை போன்ற நிகழ்வாய் அமைந்திருக்கிறது.
எமது நாட்டின் அரசியலில் அபூர்வ உயிரினமாகவும் கனவான் அரசியல்வாதியாகவும் அங்கீகரிக்கப்படுகின்ற இம்தியாஸ், தனது சுயரூபத்திற்கு ஏற்றவாறு கட்சியை விட்டு விலகியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. நான்கு வரிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த அவரது இராஜினாமா கடிதத்தில் அவர் யாரையும் அல்லது எதையும் குற்றம் சாட்டவில்லை. ஆனால், அவருக்கு தவிசாளர் நாற்காலியிலிருந்து எழும்புவதற்கு என்னென்ன பிரச்சினைகள் இருந்தன என்பது நாட்டின் அரசியல் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும். பெரும்பாலான இராஜினாமாக்களைப் போலவே இது எதுவும் தனிப்பட்டது அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
சஜித் பிரேமதாசவை விடவும் ரணில் விக்கிரமசிங்கவை விடவும் நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்ட இம்தியாஸ் தனக்கேட்பட்ட தனிப்பட்ட அநீதிகளை ஒருபோதும் அரசியல் பிரச்சினையாக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. 2001-4 அரசாங்கத்தில் வெகுஜன ஊடகம், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த அவர், வெகுஜன தொடர்பாடல் துறையில் பட்டம் பெற்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரான ஒரே நபர் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தும் அந்த அமைச்சில் எந்த வேலையும் செய்ய அவரது கட்சியின் தலைவரும் அந்த அரசாங்கத்தின் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அனுமதிக்கவில்லை. ரணில் இம்தியாஸின் கைகளைக் கட்டிப்போட்டு, தனக்கு நேரடியாகத் தெரிவிக்கும் நபர்களையே அமைச்சின் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தலைமைப் பொறுப்பில் அமர்த்தினார். ஆனால், 2004ல் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியலில் இருந்து விலகி இருக்கக் காரணமானது, நாட்டின் அரசியல் தீர்மானங்களின் பொதுவான விடயமாகும்.
மகிந்த ராஜபக்சவும் இம்தியாஸ் பாக்கீர் மார்க்காரும் அரசியலில் பிரவேசித்த நாள் முதல் பலஸ்தீன விடுதலைக்காகப் போராடிய இந்த நாட்டின் இரண்டு இராணுவ வீரர்கள் என்பது உலகறிந்த விடயமாகும். அப்போது, பலஸ்தீன மக்களுக்கு எமது நாட்டு ஆதரவை வெளிப்படுத்தும் முயற்சியாக பலஸ்தீனத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை உறுதிப்படுத்தி வழிமொழிவதற்கு அரசாங்க அமைச்சராக இருந்த இம்தியாஸ் இணக்கம் தெரிவித்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் ரணில், அணிசேரா நாடாக செயல்படாமல், அமெரிக்காவின் நல்ல பிள்ளையாக இருப்பது ரணிலுக்கு முக்கியம் என்பதால், இந்த பிரேரணைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என இம்தியாஸிடம் தெரிவித்தார். இதனால்தான் இம்தியாஸ் 2004 இல் ரணிலையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் விட்டு வெளியேறி பதினாறு வருடங்கள் அரசியல் மௌனத்தில் இருந்தார். அவர் சமீபத்தில் எழுதிய சுயசரிதையில் அதைக் குறிப்பிடும் வரை அதனை பகிரங்கமாகத் தெரிவித்து வீரனாக வேண்டும் என்று அவர் முயற்சிக்கவில்லை.
2005-2015 காலப்பகுதியில் மகிந்த ராஜபக்சவிடமிருந்து அமைச்சுப் பதவிகளும் வெளிநாட்டுத் தூதுவர் பதவிகளும் வழங்கப்பட்ட போது, பதவிகளுக்காக தனது அரசியல் நம்பிக்கையை கைவிடவில்லை என்பது மட்டுமன்றி அதனையும் நாட்டிற்கு உரத்த குரலில் தெரிவித்து புள்ளிகளை சேகரிக்கச் செல்லவில்லை என்பதும் சிலருக்குத் தான் தெரியும்.
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டக் கூடிய வேளையில், அவரது பெயர்; தேசியப் பட்டியலில் சேர்க்கப்பட்ட போதும், தேசியப் பட்டியலில் இருந்து நியமிக்கப்படக் கூடிய ஐவரில் அவரது பெயர் இடம்பெறாத போதும் அவர் முறைப்பாடு செய்யவில்லை. ஆனால் அவர், ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த நாள் முதல் கட்சி மறுசீரமைப்புக்கான கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டபோது அவர் ஏமாற்றமடைந்திருக்க வேண்டும் என்று நாம் கற்பனை செய்யலாம். ஜனாதிபதித் தேர்தல் தோல்வி குறித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாதவர்களை உள்ளடக்கிய குழுவினைக் கொண்டு பிரேதப் பரிசோதனை நடாத்துதல், எப்போதும் கூடாத செயற்குழுவைக் கூட்டுதல் மற்றும் வாராந்தம் கூட வேண்டிய நிர்வாகக் குழுவைக் கூட்டுதல் போன்ற கோரிக்கைகள் நிறைவேறாதபோது அவர் காத்திருந்தது போதும் என்று அவர் நினைத்திருக்க வேண்டும்.
இம்தியாஸுக்கு முன்னரே அந்த எண்ணம் இருந்தவர்களும் உண்டு. சரத் பொன்சேகா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, தலதா அத்துகோரள ஆகியோர் அவர்களுள் அடங்குவர். கொழும்பு மேயர் வேட்பாளராக எரான் விக்ரமரத்ன நிறுத்தப்படாமை, ஹிருணிகா பிரேமச்சந்திர ஐக்கிய மகளிர் சக்தியின் பிரதம அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியமை மற்றும் ஹர்ஷ டி சில்வா கொழும்பு மாவட்டத் தலைவர் பதவியில் நியமிக்கப்படாமை போன்ற விடயங்கள் சாம்பலின் கீழ் உள்ள தீப்பொறிகளாக காணப்படும் விடயங்களாகும். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் இந்த விடயங்கள் குறித்த பொறுப்புக்களோ கவனமோ எடுப்பதாக தெரியவில்லை.
2020 இல் ஐக்கிய தேசியக் கட்சி எங்கு வீழ்ந்தது என்பது குறித்தும் தற்போது ஐக்கிய மக்கள் சக்தி எவ்வாறு பயணிக்கிறது என்பது குறித்தும் நாம் சிந்திக்கின்ற போது, எமக்கு இவ்வாறான சிந்தனை தோன்றியது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு உயிரியல் குழந்தை இல்லையென்றாலும், அரசியல் உலகில் வெட்டவெளி போல் ஒரு அரசியல் குழந்தை உள்ளது. ஆச்சரியம் என்னவென்றால், அந்தக் குழந்தையும் ரணில் மிகவும் மதிக்கும் அவரது கல்லூரியான ரோயல் கல்லூரியில் படித்தது தான். ரணிலைப் போலவே இந்தக் குழந்தையும் போட்டியிடுகின்ற அனைத்து தேர்தல்களிலும் தோற்கிறது. அதுமட்டுமில்லாமல், இந்தக் குழந்தை தனது அரசியல் தந்தையைப் போல் தனது கட்சியில் இருந்து வேறு யாரையும் தலைவராக வர விடுவதில்லை. முன் கணிப்புகளின்படி, முதியவரைப் போலவே அவரும் முதுமை வரை கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பார் என்றே நினைக்க வேண்டும். ரணிலின் நடவடிக்கைகள் இந்த நாட்டில் இரு கட்சி முறையை சிதைத்து ஏழு தசாப்த கால பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாரிய ஆபத்தில் ஆழ்த்தியது. அவரது அரசியல் குழந்தையும் தான் நொட்டியின் மகன் இல்லை (தந்தை செய்ததை மகன் செய்யாவிட்டால் அவன் நொட்டிகே புதா – (நொட் உகே புதா) என்று சிங்கள சமூகத்தில் ஒரு கருத்தாடல் உள்ளது. அதாவது தானும் தந்தை வழி செல்பவன் என்பது) என்று காட்டி வருகிறது.
இம்தியாஸ் பாக்கீர் மார்கார், உங்கள் மதிப்பு அவருக்கு புரியவில்லை என்பதல்ல. அவர் தனது அரசியல் தந்தை சென்ற அதே பாதையில் தனது சிறிய குழுவினருடன் பயணித்துக் கொண்டுள்ளார்.
அருண நாளிதழ்
ஆசிரியர் கருத்து
2025 மார்ச் 20
Post a Comment