Header Ads



ரமலான் மாதம் கருணையையும், மன்னித்தலையும், சகிப்புத்தன்மையையும் வெளிப்படுத்தும் மாதம்


வருடம் தோறும் ரமலான் மாதத்தில் சிறைவாசிகளுக்கு விடுதலை வழங்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆட்சியாளர்கள், இந்த வருடமும் 3500க்கும்  மேற்பட்ட சிறைவாசிகளை விடுவித்ததன் மூலம் ரமலான் மாதம் கருணையையும், மன்னித்தலையும், சகிப்புத்தன்மையையும் வெளிப்படுத்தும் மாதம் என்பதை உலகுக்கு எடுத்துக்கூறியுள்ளனர்.


கடந்த காலங்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு அமீரகத்தின் சிறைகளில் இருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் நன்னடத்தையை கருத்தில் கொண்டு சிறைத்துறை அதிகாரிகளின் பரிந்துரை அடிப்படையில் அவர்கள் குடும்பத்தோடு ரமலான் மாதத்தை மகிழ்ச்சியாக கழிக்கும் வகையில் விடுதலை செய்யவும், அவர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகையை அந்தந்த ஆட்சியாளர்களே செலுத்துவதாகவும் அறிவித்துள்ளனர்..


இதன் மூலம் எமிரேட்ஸ் ஆட்சியாளர்களான  ஷேக் முகமது பின் ஷாயித் அல் நஹ்யான் அபுதாபி சிறையிலிருந்து 735 பேரையும், 


ஷேக் முகமது பின் ராசித் அல் மக்தூம் துபாய் சிறையிலிருந்து  1295 பேரையும், 


ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி ஷார்ஜா சிறையிலிருந்து  705பேரையும், 


ஷேக் ஸவுத் பின் ஸக்ர் அல் காசிமி ராசல் கைமா சிறையிலிருந்து  506பேரையும், 


ஷேக் ஹுமைத் பின் ராசித் அல் நுஐமி அஜ்மான் சிறையிலிருந்து  207பேரையும்,  விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்..


தவறுகளிலிருந்து திருந்தி தங்கள் குடும்பத்துடன் இணைந்து வாழ்வதற்கும், ரமலான் மாதத்தின் அருட்கொடைகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கிடைத்திடவும் காரணமான அமீரக ஆட்சியாளர்களின் கனிவு பாராட்டுக்குரியது...


Colachel Azheem

No comments

Powered by Blogger.