Header Ads



முன்னாள் சபாநாயகர் குறித்தும், அவரது மகள் பற்றியும் வெளியாகியுள்ள தகவல்


பாராளுமன்ற வாகனங்கள் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் சபாநாயகர் ஒருவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது மகளின் போக்குவரத்துக்காக அரச வாகனம் மற்றும் எரிபொருளை சிறிது காலமாகப் பயன்படுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


பாராளுமன்றத்தின் வாகனம் ஒன்று அம்பாறை பகுதிக்கு அடிக்கடி சென்று வருவதாகத் தகவல் வெளியானதை தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையின் போது இந்தத் தகவல் தெரியவந்ததாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


சந்தேக நபரான முன்னாள் சபாநாயகர், கடந்த பத்து ஆண்டுகளில் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி இரண்டு வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார் என்றும், தனது வாகனங்களுக்கு வரம்பற்ற எரிபொருளைப் பயன்படுத்தியுள்ளார் என்றும் விசாரணை குழுக்களுக்குத் தகவல் தெரியவந்துள்ளது.


கடந்த பத்து ஆண்டுகளில் முன்னாள் சபாநாயகர்கள், துணை சபாநாயகர்கள், துணைக் குழுத் தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் வாகனங்கள் மற்றும் எரிபொருளைப் பயன்படுத்திய விதம் குறித்து அறிய சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவின் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.


இந்த விசாரணையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் எரிபொருள் தொடர்பான பல தகவல்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன என்று அறியப்படுகிறது.

No comments

Powered by Blogger.