கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றுவதே எமது பிரதான இலக்கு
போலித்தேசியவாதிகள் எமது மக்களை தவறாக வழிநடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றுவது தான் எமது பிரதான இலக்காகும் என்று கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு றிவோரா ஹோட்டலில் சனிக்கிழமை (22) நடைபெற்ற கிழக்குத் தமிழர் கூட்டமைப்பில் கருணா அம்மான் இணைந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் ஆயத ரீதியான போராட்டத்திலிருந்து எதற்காக ஜனநாக வழிக்கு திரும்பினோமோ அந்த இலக்கை அடைவதற்காவே மீண்டும் இணைந்திருக்கின்றோம். வடக்கு மாகாண மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்துவிட்டார்கள்.
அவர்களை எதிரிகளாகவே பார்க்கின்றார்கள். அவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தில் போலித்தேசியவாகளுக்கு இடமளிக்க முடியாது. அவர்களை அகற்ற வேண்டும். அவர்களின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
அந்த வகையில் கிழக்கு மாகாண மக்கள் பல விடயங்களில் தெளிவுற வேண்டியுள்ளது. அதற்காக எமது பயணமானது முடிவற்றதாக தொடர்ச்சியானதாக இருக்கும் நாம் வரலாற்றை படைத்தவர்கள்.
நாம் வரலாற்றை மாற்றியமைத்தவர்கள். ஆகவே எம்முன்னிலையில் வந்துநின்று தேசியம் பேசுவதற்கு எவருக்கும் அருகதையில்லை என்றார்.
Post a Comment