Header Ads



நெருங்கிய நண்பர்களின் நாசகரமான செயற்பாடு


திக்வெல்ல, ஊருகமுவ பகுதியில் நேற்று (19) இரவு சுமார் 450 மில்லியன் ரூபா பெறுமதியான 33 கிலோகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். 


போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. 


திக்வெல்ல, ஊருகமுவ பகுதியில் உள்ள வீடொன்றில் ஹெரோயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சில நாட்களாக விசாரணையை முன்னெடுத்த வந்தனர். 


அதன் பலனாக நேற்று இரவு வீட்டை சோதனையிட்ட விசாரணை அதிகாரிகள் 33 கிலோகிராம் 106 கிராம் ஹெரோயின் அடங்கிய 29 பொதிகளை கண்டுபிடித்தனர். 


குறித்த வீட்டின் உரிமையாளரைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது, ​​'ரன் மல்லி' என்ற போதைப்பொருள் வர்த்தகரால் மேற்படி போதைப்பொருட்கள் அவருக்கு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 


‘ரன் மல்லி’ என்ற சந்தேக நபருடன் ஒரே பாடசாலையில் ஒரே தரத்தில் கல்வி பயின்றதாகவும், இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது. 


450 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கையிருப்பு குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகிறது. 


பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

No comments

Powered by Blogger.