Header Ads



இலங்கைடுக்கு தான் கடமைப்பட்டுள்ளதாக, உக்ரைன் ஜனாதிபதி. தெரிவிப்பு


இக்கட்டான நிலையிலும் உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட துணை நிற்கும் இலங்கை நாட்டுக்கு தான் கடமைப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.


புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான உக்ரைனிய உயர்ஸ்தானிகரை இன்று(25.03.2025) சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், இலங்கை மற்றும் உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு குறித்தும் ஜெலென்ஸ்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


மேலும், வர்த்தகம், கல்வி, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் இலங்கையுடனான இருதரப்பு ஒத்துழைப்பை எதிர்காலத்தில் ஏற்படுத்துவது குறித்தும் அவர் ஆலோசித்துள்ளார்.


இதேவேளை, உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா உடன் நடத்திவரும் பேச்சுவார்த்தை தொடர்பிலும் உயர்ஸ்தானிகரிடம் அவர் விளக்கமளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.