விலங்கு கணக்கெடுப்பு வெற்றி - நாமல் கருணாரத்ன
இன்று காலை 8 மணி முதல் தனது வீட்டுத் தோட்டம், விவசாய காணி, புண்ணியஸ்தலங்கள், மற்றும் வேறு பொது இடங்களை அவதானித்து அந்த சூழலில் உள்ள குரங்குகள், செங்குரங்குகள், மர அணில்கள், மற்றும் மயில்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையை வீடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த கையேட்டில் குறிப்பிடுமாறு விவசாய அமைச்சு ஆலோசனை வழங்கியிருந்தது.
இந்த கணக்கெடுப்பு அந்த அந்த பிரதேசங்களிலுள்ள கிராம உத்தியோகத்தரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
அதற்காக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி அதிகாரி, விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் உள்ளிட்டோரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டது.
இன்று காலை மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பு தொடர்பில் கணக்கெடுப்பு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது என விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கருத்து தெரிவித்தார்.
குருநாகல், பொல்பித்திகம, ரம்பேவெஹெரகல விகாரையில் விலங்கு கணக்கெடுப்பில் ஈடுபட்டார்.
அத்தகைய பிரதேசங்களுக்கு விலங்கு கணக்கெடுப்பிற்காகத் தேவையான கையேடு கிடைக்காத போதிலும் அதன்படி மக்கள் வெற்று காகிதங்களில் உரியத் தரவுகளை குறித்தமையை காணக்கூடியதாக இருந்தது.
Post a Comment