இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டினால், அனுரகுமார ராஜாவுக்கும் வலிக்குது...
உள்ளதை சொல்றேன்
அங்க அடிச்சா, இங்க ஏன் வலிக்குது..?
இஸ்ரேல் வெள்ளை உலக ஏகாதிபத்திய நாடுகளின் செல்ல பிள்ளை. இந்த "செ-பிள்ளை" செய்யும் அட்டூழியங்கள் 3ம் உலக போரை கொண்டு வந்தாலும் ஆச்சரிய பட முடியாது.
இந்த "செ-பிள்ளை" அட்டகாசங்கள் எல்லை மீற, பலஸ்தீன உடன் பிறப்புகளை ஆதரிப்பதாக கூறி கொண்டே, இரகசிய அஜன்டாவில் செயற்படும் அரபு உலக மகா ராஜாக்களும், யுவ ராஜாக்களும் துணை காரணங்கள் என்பது மறுக்க முடியா கசப்பு உண்மை.
இப்போ இங்கே என்ன என்றால், அங்க உள்ள இஸ்ரேலுக்கு எதிராக இங்க, ருஷ்டி என்ற 22 வயதர், ஸ்டிக்கர் ஒட்டினால், நம்ம அனுர குமார ராஜாவுக்கும் வலிக்குது.
நம்ம மனசும், இதை நினைச்சா வலிக்குது.
ஆனாலும், இதிலென்ன ஆச்சரியம்?
பலஸ்தீனத்துக்கு வாழ்நாள் ஆதரவு அளித்து கொண்டே, நம்ம பக்ச-ராஜா, அதே மாதிரியான ஈழத்தமிழர் போராட்டத்தை போட்டு தாக்க வில்லையா?
எல்லாமே ஒரே குட்டை மட்டைகள் தான். நாமதான் பார்த்து எதோ சூதானமா நடந்து கோனும்!
மனோகணேசன்
Post a Comment