Header Ads



குழந்தைகளின் உச்சந்தலையை ஏன் அழுத்தக் கூடாது..?


புதிதாக குழந்தைகள் பிறக்கும் போது (Fontanelle) ஃபோண்டனொல் எனப்படும் பகுதி மிகவும் மென்மையான மண்டை ஓட்டுடன் தான் பிறக்கின்றனர். மிக மிருதுவான இந்தப் பகுதியானது கொஞ்சம் கூடுதலாக அழுத்தப்படும் போதும் கடுமையான மூலைப் பாதிப்புக்கள் ஏற்பட்ட வாய்ப்பிருக்கின்றன. 


பொதுவாக ( நீங்கள் படத்தில் பார்க்கும்) இந்த ஃபாண்டானல் எலும்புகள் சரியாக வளர்ந்து ஒன்றிணைய சுமார் ஒன்றரை ஆண்டுகள் வரை பிடிக்கும். 


சரி, உங்களிடம் இப்போது ஒரு கேள்வி வரலாம்! பிறக்கும் குழந்தையின் ஏனைய உருப்புக்கள், எலும்புகள் ஓரளவு வலுவாக இருக்க, இந்த உச்சந்தலை மட்டும் ஏன் போதிய பாதுகாப்பற்றதாக உள்ளது?


காரணம்...


ஃபோன்டனலில்" பகுதியில் காணப்படும் இந்த நெகிழ்வுத்தன்மை கொண்ட சவ்வுகள்  காரணமாக பிரசவ வேளையில் குழந்தை எளிதாக வெளியேர வழி வகுக்கின்றது. 


இதற்கு மாறாக வலுவான எலும்புகள் கொண்டதாக அமையப்பெற்றிருந்தால், பிறப்புக் கால்வாயிலிருந்து வளைந்து நெளிந்து வெளியேருதல் என்பது மிகக் கஷ்டமான காரிமாக இருக்கும். 


மேலும் "ஃபோன்டனலில்" பகுதியில் காணப்படும் இந்த அசாதாரண நெகிழ்வின் காரணமாக குழந்தையின் மூளை வளர்ச்சி சீரடையவும் அது விரிவாக்கம் அடையவும் ஏதுவாக அமைந்துவிடுகிறது. 


✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.