பாம்பு எறும்புகளின் குடியிருப்பைத் தாக்க வரும்போது, அவைகள் அதனிடம் சரணடைவதில்லை...
முழு வீரத்துடனும் மிகுந்து அர்ப்பணிப்புடனும் போராட ஆரம்பிக்கும்...
'உயிர் போனாலும் பரவாயில்லை, உரிமைகளை விட்டுக்கோடுக்க மாட்டோம்" என்ற கோட்பாட்டில் பிடிவாதமாக இருக்கும்.
பாம்பின் உடல் பலம் கண்டு அற்பமான ஏறும்புகள் அஞ்சுவதில்லை....
இறைமைக்குப் பங்கம் விளைவிக்க வந்த எதிரி எவனாக இருந்தாலும் எதிர்த்து, உரிமைப் போராட்டத்தில் குதிப்பதே ஒரே தீர்வு என்பதில் ஏகமனதுடன் செயற்படும்.
இந்த நேரத்தில் பாம்பை சூழ்ந்து போராடும் நூற்றுக்கணக்கான எறும்புகள் வீரமரணம் அடையத்தான் செய்யும்.
தண்ணீர் பாய்ச்சாமல் மரம் வளருமா?
இரத்தம் சிந்தாமல் உரிமைகள் கிடைக்குமா?
முடிவில் "வாழ்வா சாவா" என்ற உரிமைப் போராட்டத்தில் குதித்த ஆயிரக்கணக்கான ஏறும்புகளுக்கு முன்னால் பலமான பாம்பு ஈடுகொடுக்க முடியாமல் நம்பிக்கை இழந்துவிடும்.
பலமான பாம்பு தப்பினோம், பிழைத்தோம்" என்று ஓட்டம் எடுக்கும், அல்லது அற்ப எறும்பின் சளைக்காத போராட்டத்தில் பலியாகிவிடும்.
மேற்குலகால் போஷிக்கப்படும் பலமான ஸியோனிஸ விஷப் பாம்பும், பாலஸ்தீன மண்ணில் இதைத்தான் செய்கிறது.
கண்மூடித்தனமாக அராஜகங்களை அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான உயிர்ப் பலிகள் நடந்துகொண்டிருந்தாலும், பாம்பின் மீது மரண அடி விழுந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த முறை அந்த பாம்பு சாகும், அல்லது சாகாமல் இருக்கும். ஆனால் என்றோ ஒரு நாள் அதற்கு சாவு நிச்சயம்.
இந்தக் கதை குழந்தைகளை தூங்க வைக்க சொல்லப்டும் கதையல்ல...!!!
தூங்கியிருக்கும் பெரியோர்களை எழுப்ப வைக்க சொல்லப்படும் கதை இது...!
عاش فلسطين حرا أبيا
Imran Farook
Post a Comment