பட்டலந்தை பற்றி மாத்திரம் விசாரிக்காமல் தமிழ், முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்களையும் விசாரிக்க வேண்டும்
பட்டலந்த விவகாரத்தில் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் இடத்து நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்,நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.
மேலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
பட்டலந்த சம்பவம் ஜே.வி.பியின் கலவரத்தின் போது ஏற்பட்டதாக சுட்டிக்காட்டிய மனோ கணேசன் ஜே.வி.பேயினாலும் பலர் கொல்லப்பட்டதாகக் கூறினார்.
ஜே.வி.பியினர் கொல்லப்பட்டதை மாத்திரம் விசாரிக்காமல் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டமை தொடர்பிலும் விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
பட்டலந்தை தொடர்பில் மாத்திரம் விசாரிக்காமல் தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெற்ற இன அழிப்பு சம்பவங்களையும் விசாரிக்க வேண்டும் என மனோ கணேசன் குறிப்பிட்டார்.
பட்டலந்த அறிக்கையினை ஜே.வி.பி விரும்பி சமர்ப்பிக்கவில்லை எனவும் அழுத்தம் ஒன்றின் காரணமாகவே சமர்ப்பித்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது தமக்கு இவ்வாறு தோன்றுவதாகக் குறிப்பிட்டார்.
Post a Comment