எனக்கு லஞ்சம் தர முன்வந்தார்கள் - அமைச்சர் வெளியிட்ட தகவல்
மக்காச்சோளம் இறக்குமதியாளர்களால் தனக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த கூறுகிறார்.
ஒரு நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் லால் காந்த,
கடந்த நான்கு மாதங்களில் சிலர் தன்னை சந்தித்து மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்ததாகக் கூறினார்.
"கடந்த நான்கு மாதங்களுக்குள், சிலர் என்னைச் சந்திக்க வந்தார்கள். மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு அவர்கள் கோரினர். அவர்கள் எனக்கு இவ்வளவு பணம் தருவதாகச் சொன்னார்கள்," என்று அவர் வெளிப்படுத்தினார்.
அரசியலில் இருந்து ஊழலை முற்றிலுமாக ஒழித்திருப்பதை அரசாங்கம் நிரூபித்துள்ளதாக அமைச்சர் லால் காந்த கூறினார்.
இருப்பினும், பொது சேவைகளில் ஊழல் அதிகமாக இருப்பதாக அவர் மேலும் கூறினார், "அதுவும் கவனிக்கப்பட்டவுடன், எங்கள் பணி முடிந்து விடும்” என்றார்.
Post a Comment