அமெரிக்காவிலிருந்து வந்த கஞ்சா, விடுவிக்க முயன்ற சுங்க அதிகாரி வீட்டிற்கு அனுப்பப்பட்டார்
3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கஞ்சா எண்ணெய் பொதியை விடுவிக்க முயன்றதற்காக சுங்க பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து மாலபே பகுதியில் உள்ள ஒருவருக்கு அனுப்பப்பட்ட குறித்த பொதியை சுங்க பரிசோதகர் விடுவிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
எனினும், 3 கிலோகிராம் 200 கிராம் கஞ்சா எண்ணெயுடன் அவர் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்க பணிப்பாளருமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.
கஞ்சா கையிருப்பின் மதிப்பு 300 மில்லியன் ரூபா என்று கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுங்க பரிசோதகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment