நான் செய்த அனைத்து, பிழைகளையும் ஏற்றுக்கொள்கிறேன் - அர்ச்சுனா
- Ramanathan Archchuna -
யாழ்ப்பாண நகர சபை தவிர்ந்த மிகுந்த அனைத்து இடத்திலும் திட்டமிட்டபடி பிறப்பு சான்றிதலுக்கான மேலதிகமாக சமாதான நீதவானால் ஒரு சத்திய பிரமாண கடிதம் தேவை என்பதை அவர்கள் தேர்தல் மனு வேட்பு செய்யும் கட்டணம் கட்டும் நேரத்தில் எங்களுக்கு தெரிவிக்கவில்லை.
ஆனால் கடந்த மார்ச் மாதம் மூன்றாம் திகதி ஊடக வெளியீடாக தேர்தல் ஆணைக்குழு அந்த மேலதிக தேவையை போட்டியிடுகிறார்கள் அவை எங்களுக்கு தெரியாமல் போனது தான் எங்களுடைய மிகுந்த பத்து மீதி உள்ளூராட்சி சபை தேர்தல் மனுக்களும் நிராகரிக்கப்பட காரணம்.
இந்த தடவை உள்ளுராட்சி சபை தேர்தல்களில் மக்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொள்ளாமல், முன் திட்டமிடல் இல்லாமல் நான் செய்த அனைத்து பிழைகளையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்!
என்னை என் ரத்த சகோதரர்கள் புலம்பெயர் என் தாய்க்குடி உறவுகள் மன்னித்துக் கொள்ளுங்கள்.
என் அரசியல் வாழ்க்கையில் இன்றிலிருந்து ஒரு நாளாவது கவலை இனமாக ஏதாவது ஒரு பிழை நான் விடுவேனாக இருந்தால் நான் அரசியலில் இருந்து விலகிக் கொள்வேன்.
என் மீது கொண்டிருந்த அதீத நம்பிக்கையால், சில விடயங்களை நான் இலேசாக நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் கடைசி நேரங்களில் அவை முடியாமல் போய்விட்டது.
என்னால் என் கட்சியில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த எத்தனையோ உறவுகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
என்னை நம்பி வந்ததற்காக அவர்களை மனதால் பாதிக்கும் அளவிற்கு முகப்புத்தகங்களில் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
முழு பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்வதால் இந்த முகப்புத்தகத்தை கமெண்ட் செக்ஷனை ஓப்f பண்ணாமல் விடுகிறேன்.
நாகரிகமான சிறுவர்கள் வாசிக்கக்கூடிய கருத்துக்களை பதிவிடுங்கள்.
நான் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அனைத்தையும் பதிலளிக்கிறேன்.
இது தோல்விதான்..
இந்தத் தோல்வி என்னால் மட்டுமே ஆனது தான்..
Post a Comment