ஹாபிழ்களை கௌரவித்த பாடசாலை, மாணவரின் நெகிழ்ச்சிகர சம்பவம்.
(சுலைமான் றாபி)
புனித ரமழான் மாதத்தில் நிந்தவூர் பிர்தௌஸ் ஜும்மா பள்ளிவாசலில் தராவீஹ் தொழுகை நடாத்திய, 05 ஹாபிழ்களுக்கு இந்தப் பள்ளிவாசலினைச் சேர்ந்த, தரம் 07 இல் கல்வி பயிலும் எம்.எச்.எம். அம்ஹர் எனும் மாணவரினால் கௌரவம் வழங்கப்பட்ட நிகழ்வானது, நேற்றைய தினம் (26) - ரமழான் 27 இல் நிந்தவூர் பிர்தௌஸ் ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது.
தான் இந்த ரமலான் காலத்தில் தொடர்ச்சியாக தராவீஹ் தொழுகையில் கலந்து கொள்வதினால் இந்த தொழுகையை நடாத்தும் இமாம்களை கௌரவிக்க வேண்டும் என எனக்கு தோன்றியதாகவும், இதனை தனது தந்தையின் மூலம் நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருந்ததாகவும், பள்ளிவாசலின் பிரதம இமாம் மௌலவி ஏ.பி.எம். ஷிம்லியிடம் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வானது அன்றைய தினம் கலந்து கொண்டவர்களிடத்தில் மிகப்பெரும் உவகையினை ஏற்படுத்தியிருந்ததுடன், ரமலான் காலத்தில் கண்ணியமிக்க உலமாக்களை கௌரவிக்கும் முக்கியத்துவத்தினை இது எடுத்தியம்புகின்றது.
இவ்வாறான உயர்ந்த சிந்தனைகள் தற்போதைய சிறுவர்களிடத்தில் வளர்ந்து வருவதானது, பள்ளிவாசலில் தீனிய்யத்தான சூழலை ஏற்படுத்தி வருகின்றது.
இவ்வாறான நல்ல விடயங்கள் இனிவரும் காலங்களில் ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் தொடர வேண்டும் என்பதே அனைவர்களினதும் எதிர்பார்ப்பாகும்.!
எல்லோர் வாழ்விலும் அல்லாஹ் பறக்கத் செய்வானாக.
Post a Comment