Header Ads



3 வது வகுப்பு பிள்ளைகள் நோன்பு வைத்திருப்பதை பார்த்து, நோன்பு பிடிக்கும் தலைமைய ஆசிரியர் ராஜீவன்


இந்தியாவைச் சேர்ந்த  ராஜீவன் கோழிக்கோடு மாவட்டம்  வளயம் அரசு துவக்கப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றுபவர்.

 

ரமலான் மாதம் துவங்கியது முதல் தான் பணியாற்றும் பள்ளிக்கூடத்தில்  3வது வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் நோன்பு வைத்திருப்பதை பார்த்து ராஜீவனும் அவர்களின் விரதமுறை அனுபவத்தை உணர நோன்பு வைக்க துவங்கியவர்... 


அதிகாலை எளிமையான உணவு உட்கொண்டு விரதம் துவங்கியதால்,   ஆரம்பத்தில் ஒன்றிரண்டு தினங்கள் தாகமும் ஷீணமும் அனுபவப்பட்ட போதும் குழந்தைகள் நோன்புடன் வருவதைப் பார்த்து தானும் தினமும் நோன்பு வைத்து வருகிறார்.


தங்கள் பிள்ளைகள் படிக்கும் ஸ்கூல்  தலைமை ஆசிரியர் நோன்பிருப்பது அறிந்து இஃப்தாருக்கு பலரும் அழைத்த பிறகும் தனது வீட்டில் மனைவி தயாரித்து தரும் ஜுஸ், பழங்கள் பலகாரம் உண்டு நோன்பு துறந்து வருகிறார்.


Colachel Azheem

No comments

Powered by Blogger.