Header Ads



300 கிலோ கேரளக் கஞ்சா மீட்பு

 


யாழ். வடமராட்சி தும்பளை கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று காலை 300 கிலோ கிராம் கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 


கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வேளை, படகில் ஏற்றப்பட்டிருந்த நிலையில் இந்த கேரளக் கஞ்சா பொதிகள் மீட்கப்படுள்ளன. 


இந்நிலையில்,  சட்டவிரோத செயலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு,
குறித்த கேரளக் கஞ்சாப் பொதிகள் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.