காசாவில் 3 நாட்களில் 200 குழந்தைகள் உட்பட 506 பேரை கொலை செய்த இஸ்ரேல்
செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் போர் நிறுத்தத்தை முறியடித்ததில் இருந்து, 200 குழந்தைகள் உட்பட 506 காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 909 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை முதல், போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் குறைந்தது 110 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் மருத்துவ வட்டாரங்கள் அல்-ஜசீராவிடம் தெரிவித்துள்ளன.
Post a Comment