2 பேரின் ஜனாஸாக்கள் மீட்பு
களுத்துறை களப்பில் படகோட்டிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை, கட்டுகுருந்த பகுதியைச் சேர்ந்த 33 வயதான முகமது உசைர் முகமது இன்சாஃப் மற்றும் முகமது ஹுசைன் ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களில் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்பு ஏரியில் படகு சவாரி செய்வதாக தொலைபேசி மூலம் தெரிவித்ததாகவும், அதன் பின்னர் எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் இச் சம்பவம் தொடர்பான வழக்கு மூலங்களிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
களுத்துறை களப்பில் சடலமொன்று மிதப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சடலத்தை மீட்டு, மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு மற்றொரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Post a Comment