27 வருடங்களாக கோபாலகிருஷ்ணனின் இப்தார்
இந்தியாவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் நாயருக்கு இந்த வருடமும் ரமலான் 21 நோன்பு தினம் மறக்கவில்லை.
கேரளாவில் ஆலப்புழா அருகில் உள்ள இரமத்தூர் ஜும்மா மசூதியில் கடந்த 27வருடங்களாக 21ம் தினம் இஃப்தார் செலவு முழுவதும் அந்த ஊரின் நாயர் சமூகத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவருடையது.
ஆரம்ப காலங்களில் மரச்சீனி கிழங்கு, மீன்கறி நோன்பாளிகளுக்கு உபயம் செய்த கோபாலகிருஷ்ணன் தற்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் நோன்பு துறக்க ஜுஸ், பழவகைகள், பிரியாணி என்று பெரும் தொகை செலவானாலும் வருடம் தோறும் மனமுவந்து செய்து வருவதும், அன்றைய தினம் பள்ளிவாசலுக்கு தானும் வருகை தந்து அனைவருடனும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதும் வாடிக்கை.
அரசு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கோபாலகிருஷ்ணன் நாயர் இதுகுறித்து கூறும் போது "நம்மளெல்லாம் ஒண்ணல்லே" என்று சிரிக்கிறார். Colachel Azheem
https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2
வட்சப்பில் இணைய.. 👆
Post a Comment