Header Ads



24 மணித்தியாலம் மின்சாரம் வழங்குவோம் என அமைச்சர் உரையாற்றிவிட்டு அமர்ந்த சிறிது நேரத்தில் மின் தடை


- நிதர்ஷன் வினோத் -


யாழ்ப்பாணத்தில் வலு சக்தி அமைச்சர் குமார ஜயகொடி கலந்து கொண்ட கூட்டத்தில் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டது.


யாழ்ப்பாணத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவோம் என வலு சக்தி அமைச்சர் உரையாற்றி விட்டு அமர்ந்த சிறிது நேரத்தில் மின் தடை ஏற்பட்டது. 


தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் பொறியியலாளர்கள் பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் சனிக்கிழமை (29) மாலை விசேட கலந்துரையாடல் இடம்பெற்றபோதே குறித்த சம்பவம் பதிவானது.


டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன உரையாற்றிக் கொண்டு இருந்தபோதே மின்தடை ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் நிகழ்வில் தடங்கல் ஏற்பட்டது. அதன் பின்னர் மின்சாரம் வழமைக்கு திரும்பியது.


யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் சனிக்கிழமை (29) மாலை மின் தடை சிறிது நேரம் ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாண அலுவலகம் உறுதிப்படுத்தியது.


குறித்த நிகழ்வில் வலு சக்தி அமைச்சர் குமார ஜயகொடி, கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் கொடித்துவக்கு, பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லலித் சமரசேகர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.