Header Ads



பிரித்தானியாவில் இலங்கை முஸ்லிம்களின் 2 வது பரம்பரை - சமூக கட்டமைப்பை உருவாக்க SLMS UK செய்த நிகழ்ச்சி


SLMS-UK அமைப்பினால் ஐக்கிய இராச்சியம் லெஸ்டர் நகரில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் இலங்கை முஸ்லிம் இளையோர் , பதின்ம வயதினர்க்கான இப்தார் நிகழ்வு இவ்வருடமும் மூன்றாவது முறையாக  கடந்த  லெஸ்டர் Soar Vally கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.


சென்ற ஆண்டுகளைப் போன்றே இம்முறையும் ஒன்பதாம் ஆண்டு மாணவர்கள் தொடக்கம் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் அடங்களாக 150 பேர் கலந்து சிறப்பித்தனர். 


சிறப்பு விருந்தினராக மஸ்ஜித் புகாரி இமாமான அஸ்ஷேக் அமான் அவர்கள் கலந்து கொண்டு குர்ஆனின் முக்கியத்துவமும் , அன்றாட வாழ்வியலில் அது எவ்வாறான தாக்கங்களையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது என்பதனை மிகவும் த்த்ரூபமாக எடுத்தியம்பியது மாணவர்களால் மிகவும் கருத்தாளமிக்கதாகவும், தமக்கும் குடும்பம் சமூகம் மீதான கடமைகளையும் பொறுப்புகளையும் உணர்த்தியதாகவும் நினைவு கூறப்பட்டது.


ஐக்கிய இராச்சியத்தை பொறுத்தவரை இலங்கை முஸ்லிம்களின் இரண்டாவது பரம்பரையினர் பரவலாக உருவாகும் இக்கால கட்டத்தில் அவர்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பையும் சமூக கட்டமைப்பையும் உருவாக்கி அவர்களுக்கான களத்தை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இங்கு வாழும் நாம் உள்ளோம். 


அதனாலேயே இவ்வாறான நிகழ்வுகள் முக்கியமானதாக அமைகிறதென இந்நிகழ்வை ஏற்பாடு செய்த SLMS-UK அமைப்பினர் தெரிவித்தனர். 


SLMS-UK (தகவல் -பாஸில் ஏ கபூர்)








No comments

Powered by Blogger.