Header Ads



சோடா என டீசலை அருந்திய 1 ½ வயது குழந்தை


யாழ்ப்பாணத்தில் டீசலை சோடா என அருந்திய குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.


ஊர்காவற்துறை நாரந்தனை பகுதியை சேர்ந்த சதீஸ் சஞ்ஜித் என்ற 1 ½ வயது குழந்தையே உயிரிழந்துள்ளது.


குழந்தையின் வீட்டில் கடந்த 18ஆம் திகதி சிறிய ரக உழவு இயந்திர திருத்த வேலைகள் இடம்பெற்றபோது சோடா போத்தல் ஒன்றில் டீசலை வைத்துள்ளனர்.


அதனை வீட்டில் இருந்த குழந்தை சோடா என கருதி அருந்தியுள்ளது. அதனை அவதானித்தவர்கள் குழந்தையை உடனடியாக ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.


யாழ் . போதனா வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (22) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.


No comments

Powered by Blogger.