Header Ads



லண்டனுக்கு தனிப்பட்ட பயணம் - 160 இலட்சம் ரூபா அரச நிதியை, செலவழித்த தம்பதியினர் - பிமல்

 


(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர்  லண்டனுக்கு  மேற்கொண்ட தனிப்பட்ட  பயணத்துக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு 160 இலட்சம் ரூபாவை செலவழித்துள்ளது. 


அதற்காக அவர்கள் இவர்கள் வெட்கப்பட வேண்டும். வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் இந்த நிதி குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு சபைக்கு உண்மையை அறிவிக்க வேண்டுமென  சபை முதல்வரும், அமைச்சருமான   பிமல் ரத்நாயக்க வெளிவிவகாரத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார்.


பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15)  நடைபெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான  வரவு, செலவுத் திட்டத்தின்   வெளிவிவகாரம்,  வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்  மற்றும்  சுற்றுலாத்துறை அபிவிருத்தி  அமைச்சு மீதான விவாதத்தில்  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,


வெளிவிவகார அமைச்சினால் வழங்கப்படும் சேவைகளுக்காக நாட்டு மக்களின் வரிப்பணம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஏனைய அமைச்சுக்களில் காணப்படும் ஊழல் மோசடி மற்றும்  நிதி வீண்விரயம்   வெளிவிவகாரத்துறை அமைச்சினையும் விட்டுவைக்கவில்லை.  


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்  22 மற்றும் 23 ஆம் திகதிகளில்  லண்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயம் தொடர்பிலான ஆவணங்களை   சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.


இந்த தனிப்பட்ட விஜயத்துக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு செலவழித்துள்ளது. இந்த தனிப்பட்ட விஜயத்தில் ரணில் விக்கிரமசிங்கவின்  பாரியார்,  சேனாநாயக்க திசாநாயக்க, சந்திரா  பெரேரா உட்பட 10 பேர்  கலந்துக்  கொண்டுள்ளனர்


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது மனைவியின் தனிப்பட்ட லண்டன்  பயணத்துக்கு  வெளிவிவகாரத்துறை அமைச்சு 160 இலட்சம் ரூபாவை  செலவழித்துள்ளது. 


ஆரம்பத்தில் தனிப்பட்ட  பயணம் என்று  குறிப்பிடப்பட்ட நிலையில்  பயணத்தின் பின்னர்  அரசமுறை  பயணம்  என்று  ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த பயணத்துக்கான செலவுகள் தொடர்பான ஆவணங்களை    சபைக்கு சமர்ப்பிக்கிறேன். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் வங்குரோத்து நிலைக்கு மத்தியில் மக்களின் நிதியை இவ்வாறு வீண்விரயமாக்கியுள்ளார்கள். உண்மையில் வெட்கப்பட வேண்டும். 


வெளிவிவகாரத்துறை அமைச்சு இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு சபைக்கு உண்மையை அறிவிக்க வேண்டும் என்றார்.


வெளிவிவகார அமைச்சினால் வழங்கப்படும் சேவைகளுக்காக நாட்டு மக்களின் வரிப்பணம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. 

No comments

Powered by Blogger.