மூதூரில் இரட்டைக் கொலைகள் - சந்தேகநபரான 15 வயது சிறுமி, சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் ஒப்படைப்பு
மூதூர் - தாஹா நகர் பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை வீடொன்றிலிருந்த வெட்டுக்காயங்களுடன் 2 பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 68 மற்றும் 72 வயதான சகோதரிகளே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் 72 வயதான பெண்ணின் பேத்தியான 15 வயது சிறுமி காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிந்தார்.
குறித்த சிறுமியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது 2 பாட்டிமாரையும் கத்தியால் குத்தி கொலை செய்ததாக சிறுமி ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அதற்கமைய, சந்தேகநபரான சிறுமி இன்று(16) மூதூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி தஸ்மீன் பௌசான் முன்னிலை ஆஜர்ப்படுத்தப்பட்டதாக பொாலிஸார் கூறினர்.
இதன்போது சிறுமியை சிறுவர் நன்னடத்தை நிலையத்திற்கு அனுப்பிவைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட 2 பெண்களினதும் பூதவுடல்கள் இன்று(16) நல்லடக்கம் செய்யப்பட்டன.
Post a Comment