Header Ads



சகோதரிகள் கொலை - 15 வயது சிறுமி கைது


மூதூர் - தாஹாநகர் பகுதியில் இன்று காலை இரண்டு சகோதரிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 15 வயதுச் சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். 


இதில், 68 மற்றும் 74 வயதுடைய இரண்டு சகோதரிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 


உயிரிழந்தவர்களில் ஒருவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் எனவும் மற்ற நபர் தாதி எனவும் தெரிவிக்கப்படுகிறது . 


இந்நிலையில், கொலையுண்ட இருவரினதும் பேத்தியான 15 வயது சிறுமி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.