Header Ads



பேஸ்புக் விருந்து சுற்றி வளைக்கப்பட்டு, 15 யுவதிகள் உட்பட 76 பேர் கைது


 சீதுவ பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட கிடிகொட பெல்லானவத்த பகுதியில் அமைந்துள்ள  ஹோட்டல் ஒன்றில் சனிக்கிழமை (22) இரவு நடைபெற்ற பேஸ்புக் விருந்து சுற்றி வளைக்கப்பட்டு, 15 யுவதிகள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்களிடம் இருந்து ஐஸ், கேரளா கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


இதன்போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்த 03 பெண்களும் 14 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அத்துடன்,  இந்த களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 12 சிறுமிகள் மற்றும் 47 இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை  சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.