13 நாட்கள் தேசபந்துவுக்கு விளக்கமறியல்
காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று முற்பகல் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
வெலிகம - பெலேன பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக 2023 டிசம்பர் 31 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கில் அவர் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
இந்தநிலையில்,தலைமறைவாகியிருந்த காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று முற்பகல் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
பின்னர் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Post a Comment