Header Ads



Gov pay திட்டம் 7 ஆம் திகதி, ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்


டிஜிட்டல் கொடுப்பனவுகளில் புதிய யுகத்தை குறிக்கும் வகையில் Govpay திட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் ஆரம்பம்


அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக 'Govpay' திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.


இதன் பூர்வாங்க நிகழ்வு பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.


பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியவாறு, இத்திட்டத்தின் ஊடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2025-02-03

No comments

Powered by Blogger.