துப்பாக்கிதாரியின் காதலி கைது
கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை சம்பவத்தில் துப்பாக்கிதாரியின் காதலி என்று கூறப்படும் பெண் ஒருவரை மஹரகம பொலிசார் கைது செய்து கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.
கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்த பின்னர், துப்பாக்கிதாரி தனது காதலியுடன் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வந்ததாக தற்போது தெரியவந்துள்ளது.
அதற்காக, குறித்த பெண்ணை நீர்கொழும்பு பகுதிக்கு அழைத்துச் செல்ல நபர் ஒருவர் மஹரகம பகுதிக்கு வந்துள்ளார்.
குறித்த நபரையும் கைது செய்து கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைத்தனர்.
Post a Comment