இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக தொடரும் கொடூரம்
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு மத்தியப் பிரதேசத்தின் கவுன்சிலர் ஷபிக் அன்சாரியின் வீடு புல்டோசரால் இடிக்கப்பட்டது, இப்போது நீதிமன்றம் அவரை 4 வருடங்களுக்கு பிறகு குற்றமற்றவர் என்று அறிவித்து விடுவித்துள்ளது.
ஷபிக் அன்சாரி நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது அவருக்கு சொந்த வீடு இல்லை.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய அன்சாரி, "எனது பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக நான் குரல் கொடுத்ததால் நான் குறிவைக்கப்பட்டேன். அந்தப் பெண் பழிவாங்கும் நோக்கில் என் மீது பொய்யான புகாரை அளித்தார்.
எனக்கு எந்த நோட்டீஸும் அனுப்பப்படவில்லை, காலை 7 மணிக்கு எனது வீடு இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போகிறேன்.
நான் ஜாமீனில் வெளியே வந்த பிறகு என் சகோதரனின் வீட்டில் வசிக்க வேண்டியிருந்தது. இந்த வழக்கின் காரணமாக எனது முழு குடும்பமும் பாதிக்கப்பட்டது," என்று அவர் கூறினார்.
Post a Comment