Header Ads



மின் தடைக்கு பின்னால் உள்ள காரணங்கள்


தேசிய மின்சார அமைப்பின் சமநிலையைப் பேணுவதற்கு கடந்த காலங்களில் எந்தவொரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்று மின்சக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.


முந்தைய அரசாங்கங்களின் திட்டமிடப்படாத மற்றும் குறுகிய பார்வை கொண்ட கொள்கைகளே மின் தடைக்கு வழிவகுத்ததாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் தெரிவித்துள்ளார்.


"பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக இன்று (09) முற்பகல் நாடு முழுவதும் மின் விநியோகத் தடை ஏற்பட்டிருந்தது.


தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பதில் உரிய கவனம் செலுத்தத் தவறிய முந்தைய அரசாங்கங்களின் குறுகிய பார்வை கொண்ட செயல்களாலும், தொழில்நுட்பத்தைப் பற்றிய புரிதல் இல்லாத மோசமான வழிகாட்டுதலாலும் இந்த நிலைமை ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளன.


இருப்பினும், இந்த நிலைமைக்குப் பின்னால் உள்ள காரணங்களை நாங்கள் முழுமையாக ஆராய்ந்து, இது மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.


மின் விநியோகத் தடையால் பெரிதும் இன்னல்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு எமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் மின்சார அமைப்பை மீட்டெடுப்பதில் கடினமாக உழைத்து எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி."

No comments

Powered by Blogger.