திருவடிக்குடில் சுவாமிகளின் கண்டன உரையிலிருந்து ஒரு பகுதி
எனவே இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது.
வக்ஃப் போர்டுக்குள் சீர்திருத்தங்கள் தேவை இருந்தால் அதற்குள் இருக்கக்கூடிய மார்க்க அறிஞர்களும் அந்த சமூகமும் அதனை சரி செய்து கொள்ளும். வெளியில் இருந்து யாரும் எந்த மாற்றத்தையும் திணிக்க முடியாது.
"திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
அதைச் சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது" என்பது எம்ஜிஆர் படப் பாடல்.
முதல் முறை,
2வது முறை,
3வது முறை என்று வரிசையாக ஆட்சியில் அமர்ந்திருக்கிற பாஜக அரசுக்கு சரியாகப் பொருந்தும் சரோஜாதேவி படப் பாடல் ஒன்று உண்டு.
"முதல் முறை திருடிய காரணத்தால் முழுசாய் திருட மறந்துவிட்டேன்."
இஸ்லாமியர்கள் என்ன உடுத்துகிறார்கள்? என்ன சாப்பிடுகிறார்கள்? என்ன பேசுகிறார்கள்? என்பதையெல்லாம் கவனிக்கிறார்கள். இவர்கள் கவனிக்காத ஒரே இடம், இஸ்லாமிய குடியிருப்புகளின் கழிவறை கழிவுநீர்த் தொட்டி மட்டுமே!
விரைவில் அதற்கும் சட்டம் வரலாம். அப்படி ஒரு சட்டம் கொண்டுவந்தால் அதனை நான் வரவேற்பேன். காரணம், பாரதிய ஜனதாவின் எண்ண ஓட்டத்தையும் உள்ள நாற்றத்தையும் அங்கே பார்ப்பார்கள்.
--- கும்பகோணத்தில் 15.02.2025 அன்று, ஜமா அத்துல் உலமா சபை மற்றும் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் . திருவடிக்குடில் சுவாமிகள் கண்டன உரை.
Post a Comment