Header Ads



இஸ்லாமிய நூல்கள் பற்றி பாராளுமன்றத்தில் நிசாம் கேட்ட கேள்வி - பாதுகாப்பு பிரதியமைச்சர் வழங்கிய பதில்



நாடாளுமன்றில் இன்று -06- கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர், இஸ்லாமிய நூல்களை நாட்டுக்கு கொண்டு வருகின்ற போது விதிக்கப்படுகின்ற நிபந்தனைகள் ஏனைய மத புத்தகங்களுக்கும் விதிக்கப்படுகின்றதா? என வினவினார். 


இதற்கு பதிலளித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, அரசாங்கம் என்ற அடிப்படையில் தங்களது தரப்பு பாகுபாட்டுடன் செயற்படவில்லை எனத் தெரிவித்தார். 


2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரே இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 


குறிப்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய, சகல மதங்களுக்குமான நூல்கள் தொடர்பில் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.


 இந்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சு மற்றும் முஸ்லீம் விவகார திணைக்களம் என்பவற்றின் ஊடாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஏனைய நாடுகளின் தடை விதிக்கப்பட்டுள்ள நபர்களின் நூல்களை இறக்குமதி செய்வதற்கும், பகிர்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


 பாதுகாப்பு செயலாளரின் பரிந்துரைகளுக்கு அமையவே இந்த விடயத்தில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.