அல்லாஹ்வை எப்படி புகழவேண்டும் என்பதை, கற்றுக் கொடுப்பதற்காக அல்லாஹ் அனுப்பிய வானவர்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
الدعاءالذي هبط لنا من السماء :
நமக்காக வானத்தில் இருந்து இறங்கிய துஆ
நபித்தோழர் ஹுதைபா பின் அல்யமான் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்
அவர்கள் நபில் தொழுகை தொழுது கொண்டிருந்தார்
அப்போது பின்பக்கம் ஒருவர் பின்வருமாறு கூறக்கேட்டார்
اللَّهمَّ لكَ الحمدُ كُلُّهُ*، *ولكَ المُلك كُلُّه،
بِيَدِكَ الخيرُ كُلُّهُ*، *وإليك يَرجِعُ الأمرُ كُلِّهِ علانيَتِهِ وسِرِّه،
யா அல்லாஹ் எல்லாப் புகழும் உனக்கே*, *எல்லா ஆட்சியும் உனக்கே.
உன் கையில் எல்லா நன்மைகளும் உள்ளன, * அனைத்து காரியங்களும்
அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் அதன் ரகசியமும்
உன்பாலே திரும்புகிறது ,
فأهل أنتَ أَن تُحمَدْ إنَّك على كلِّ شيء قدير،
புகழப்படுவதற்கு நீ தகுதியானவன் ஏனென்றால் நீ அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்
اللَّهمَ اغفر لي جميع مامضى من ذُنوبي،
கடந்த கால என் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக
واعصمني فيما بقيَ من عُمري
மீதமுள்ள என் வாழ்நாளில் நான் பாவம் செய்யாமல் என்னைப் பாதுகாப்பாயாக
وارزقني عَملاً صَالحاً يُرضيكَ عنِّي
நீ என்மீது திருப்தி கொள்ளும் நல்அமல் புரிய நல்வாய்ப்பை அருள்வாயாக
தோழர் தொழுகையை முடித்துக்கொண்டு திரும்பிப் பார்த்தார்
யாரும் இல்லை
இந்நிகழ்வை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களிடம் சொன்னார்
நபிபெருமானார் சொன்னார்கள்:
அல்லாஹ்வை எப்படி புகழவேண்டும் என்பதை உமக்குக் கற்றுக் கொடுப்பதற்காக அல்லாஹ் அனுப்பிய வானவர் அவர்
(முஸ்னத் அஹ்மத்)
கணியூர்இஸ்மாயீல்நாஜி
Post a Comment