Header Ads



முஸ்லிம் சிவில் நிறுவனங்கள், இளம் தலைமுறையிடம் கையளிக்கப்படுமா..?


‘இன்­றைய இளை­ஞர்­களே நாளைய தலை­வர்கள்’ என்ற வாசகம் எல்லா இடங்­க­ளிலும் ஒலிப்­ப­து வழ­மை­. எனினும், நாளைய தலை­வர்­க­ளாக இன்­றைய இளை­ஞர்ளை மாற்­று­வ­தற்கு தேவை­யான எந்­த­வொரு நட­வ­டிக்­கைளும் நமது சமூகத்தில் போதுமானளவு முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தில்லை என்பது பெருங்குறைபாடாகும்.


எமது நாட்­டிலும் இவ்­வா­றான நிலையே காணப்­ப­டு­கின்­றது. இலங்­கை­யி­லுள்ள இளை­ஞர்­க­ளுக்கு அர­சியல் மற்றும் மக்கள் பிர­தி­நி­தித்­துவம் உள்­ளிட்ட அனைத்து துறை­க­ளிலும் குறிப்­பிட்­ட­தொரு சத­வீதம் வழங்­கப்­பட வேண்டும் என்று தொடர்ச்­சி­யாக கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.


அதேபோன்றுதான் எமது நாட்­டி­லுள்ள முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களின் தலை­மைத்­துவம் இளை­ஞர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்டும் என்ற கோசம் தற்­போது வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.


எமது நாட்­டினைப் பொறுத்தவரையில் முஸ்லிம் சிவில் அமைப்­புக்கள் நீண்ட வர­லாற்­றினைக் கொண்­டுள்­ளன. டி.பி. ஜாயா, ஏ.எம்.ஏ. அஸீஸ், பாக்கீர் மாக்கார், சேர் ராசீக் பரீட் போன்ற பழம்பெரும் தலை­வர்­க­ளினால் உரு­வாக்­கப்­பட்ட முஸ்லிம் சிவில் அமைப்­புக்கள் இன்று வரை செயற்­பட்டு வரு­கின்­றன. எனினும், அவற்றின் தலை­மைத்­து­வங்கள் இன்று வரை இளை­ஞர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டாமை கவ­லை­ய­ளிக்கும் விட­ய­மொன்­றாகும்.


எமது நாட்­டினைப் பொறுத்தவரையில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, முஸ்லிம் இலங்கை கல்வி மாநாடு, தேசிய சூறா சபை, முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை, சோனகர் இஸ்­லா­மிய சங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் முன்­ன­னி­களின் சம்­மே­ளனம் எனப் பல அமைப்­புகள் தேசிய ரீதி­யாக செயற்­பட்டு வரு­கின்­றன. எனினும், இவற்றின் தலை­மைத்­து­வங்கள் இன்று வரை இளை­ஞர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. மாறாக குறிப்­பிட்ட ஒரு சிலரே அல்­லது குறிப்­பிட்ட ஒரு குழு­வி­னரே குறித்த பத­வி­களை தொடர்ச்­சி­யாக அலங்­க­ரித்து வரு­கின்­றனர். சங்­கிலிக் கதிரை போன்று முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களின் பத­விகள் குறிப்­பிட்ட சிலர் மத்­தியில் தொடர்ச்­சி­யாக மாறி­மாறி வரு­கின்­ற­மையும் சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.


அதே­வேளை, இளைஞர் என்ற பெயரில் காணப்­ப­டு­கின்ற அமைப்­புக்­க­ளிலும் கூட முதி­யோர்­களே தலைவர் உள்­ளிட்ட முக்­கிய பத­வி­களை அலங்­க­ரிப்­ப­தையும் காண முடி­கின்­றது.


இதன் ஊடாக குறித்த அமைப்­புக்கள் உரு­வாக்­கப்­பட்ட நோக்­கமே மழுங்­க­டிக்கச் செய்­யப்­ப­டு­கின்­றது. முஸ்லிம் சிவில் அமைப்­பினை உரு­வாக்­கி கட்­டி­யெ­ழுப்­பி­ய­வர்­களே மர­ணிக்கும் வரை அதன் முக்­கிய பத­வி­களை அலங்­க­ரிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே உள்ளது.


எவ்­வா­றா­யினும், முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களை உரு­வாக்கி கட்­டி­யெ­ழுப்­பி­ய­வர்­களை ஒதுக்கிவிட வேண்டும் என நாம் கூறவில்லை. மாறாக, அடுத்த தலை­மைத்­து­வத்­தினை உரு­வாக்­கு­வ­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்குமாறும் அதற்­காக எதிர்­கா­லத்தில் தலை­வர்­க­ளாக வரக்கூடியவர்­களை அடை­யாளம் கண்டு அவர்­க­ளுக்கு தேவை­யான பயிற்­சி­களை வழங்க வேண்டும் என்றுமே வலியுறுத்த விரும்புகிறோம்.

அதே­போன்று இளை­ஞர்­க­ளுக்கு தலை­மைத்­து­வத்­தினை வழங்கி அவர்­களின் வழி­காட்­டி­யா­கவும் ஆலோ­ச­கர்­க­ளா­கவும் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் இணைந்து பய­ணிக்க வேண்டும். இதுவே முன்­மா­தி­ரி­யான செயற்­பா­டாகும்.


இது போன்று தலை­மைத்­துவ பத­விக்கு வரு­கின்ற இளை­ஞர்கள், மூத்த மற்றும் சிரேஷ்ட உறுப்­பி­னர்­களை ஓரங்கட்டாமல் அவர்­க­ளுடன் இணைந்து பய­ணிக்க வேண்டும். மூத்த உறுப்­பி­னர்­களின் அனு­ப­வத்­தினை ஆலோ­ச­னை­யி­னையும் பெற்றுச் செயற்­பட்டால் மிகவும் வினைத்­தி­ற­னாக குறித்த சிவில் அமைப்­பினை முன்­கொண்டு செல்ல முடியும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாப­க­ரான எம்.எச்.எம். அஷ்ரப், தனது மர­ணத்­திற்கு முன்­னரே கட்­சியின் அடுத்த தலை­வ­ராக ரவூப் ஹக்­கீ­மினை அடை­யா­ளப்­ப­டுத்­தினார். இந்த அடை­யா­ளப்­ப­டுத்­தலை முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களின் இன்­றைய தலை­வர்­களோ முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­களோ மேற்­கொள்­ள­வில்லை. இதனால், தலை­வர்­களின் மர­ணத்­தினை தொடர்ந்து அடுத்த தலை­வரை தெரி­வு­செய்யும் போது பல பிள­வுகள் ஏற்­ப­டு­வதை எம்மால் அவ­தா­னிக்க முடி­கின்­றது.


இதே­வேளை, முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களில் இரண்டாம் நிலை­யி­லுள்ள இளை­ஞர்கள் மத்­தியில் ஒற்­று­மை­யின்­மையும் காணப்­படுகின்­றன. இதனை தங்­க­ளுக்கு சாத­க­மாக சிவில் அமைப்­புக்­களின் தலை­வர்கள் பயன்­ப­டுத்தி வரு­வ­தையும் அவ­தா­னிக்க முடிகிறது.


துடிப்­பாக செயற்­ப­டு­கின்ற ஒரு இளை­ஞ­னிடம் தலை­மைத்­து­வத்­தினை கைய­ளிக்­காமல், அவர் வயோ­தி­பத்­தினை எட்­டிய பின்னர் சுறுசுறுப்பாக இயங்க முடியாத காலத்தில் அவ­ரிடம் தலை­மைத்­து­வத்­தினை ஒப்படைப்பதன் ஊடாக எந்­த­வொரு பய­னையும் சமூகம் காண முடியாது.


இதனால், முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களின் தலை­மைத்­துவ பத­விகள் இளை­ஞர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்டும். அதே­போன்று முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களின் தலை­மைத்­து­வத்­திற்கு வரு­கின்ற இளை­ஞர்கள் மூத்த உறுப்­பி­னர்­களை இணைத்துக் கொண்டு பய­ணிக்க வேண்டும்.


துடிப்பும் அனு­ப­வமும் இணை­கின்ற போது குறித்த சிவில் அமைப்­புகளை வினைத்­தி­ற­னா­ன­தாக மாற்ற முடியும் என்­பதில் மாற்றுக் கருத்­தில்லை. இதற்கு தேவை­யான அழுத்­தங்­களை முஸ்லிம் சமூகம் பலமாக வழங்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

சமூகத்திலுள்ள பிரதான சிவில் அமைப்புகளின் தலைமைத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு வழங்குவதன் ஊடாக சிறந்த பலன்களைப் பெற முடியும். இலங்கை முஸ்லிம்களை நோக்கி வரக்கூடிய நெருக்கடிகளையும் சவால்களையும் இவர்கள் மூலம் எதிர்கொள்ள முடியும் என்பது நிச்சயம்!


Vidivelli

No comments

Powered by Blogger.