இலங்கை - அவுஸ்திரேலிய பாராளுமன்ற நட்புறவுச்சங்க இணைத் தலைவர்களில் ஒருவராக மரிக்கார் தெரிவு
இலங்கை - அவுஸ்திரேலிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் இணைத் தலைவர்களாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் அண்மையில் செய்யப்பட்டனர்.
நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் (Paul Stephens) அதிதியாகக் கலந்துகொண்டதுடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது இலங்கை - அவுஸ்திரேலிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார்.
Post a Comment