Header Ads



இலங்கை முஸ்லிம்கள் இத்தாலியில் பள்ளிவாசல், பெற உதவுமாறு றிஸ்வி முப்தி கோரிக்கை


Sri Lankan Muslim Community -Italy இன் ஏற்பாட்டில் கிராஅத் போட்டி நிகழ்ச்சிக்கு அழைப்பாளராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் Ash Sheikh Rizwe Mufthi  கலந்து சிறப்பித்திருந்தார். 


இதன்போது மிலான் நகரில் இயங்கி வரும் இலங்கை துணை தூதுவராலயத்தின் Consulate General  திருமதி  Dilani  were akin உடனான சந்திப்பொன்றை  SLMC நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. 


சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இச் சந்திப்பில் உலமா சபை தொடங்கப்பட்ட வரலாறு, தற்போது எவ்வாறு இயங்கிக்கொண்டிருக்கிறது போன்ற விடயங்களை தெளிவாக Rizwe Mufthi  எடுத்துரைத்தார். தொடர்ந்து 2012 ஆம் ஆண்டில்  இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட சவால்களை முகங்கொள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி தெளிவாக விவரித்தார். தொடர்ந்து  சில புத்தகங்களை பரிந்துரை செய்த Rizwe Mufthi அவர்கள் கட்டாயம் வாசிக்குமாறு அதிகாரிகளை வேண்டிக் கொண்டார்.


அத்தோடு தூதுவர் அதிகாரிக்கும் ஏனைய முஸ்லீம் நாடுகளின் தூதுவர்களுக்குமிடையிலான தொடர்பாடல் எவ்வாறுள்ளது என்பதையும் கேட்டறிந்து கொண்டார். இதனூடாக இங்கு இத்தாலியிலுள்ள முஸ்லிம்களின் நீண்டகால தேவையான மஸ்ஜித் ஒன்றினை பெற்றுக்கொள்ள இயன்ற உதவிகளை ஏற்படுத்தி கொடுக்கும்படி வேண்டிக கொண்டார் . இலங்கை தூதுவர் அதிகாரியும் அணைத்து விடயங்களையும் ஆவலுடன் கேட்டறிந்து கொண்டதுடன், தன்னாலான உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார் .


இறுதியாக ஜம்இய்யதுல் உலமாவினால் வெளியிட்ட  சிங்கள மொழி மூலமான அல் குர்ஆன் தர்ஜுமாவினை  அவர்களுக்கு Rizwe Mufthi அவர்கள் அன்பளிப்பு செய்தார்கள். சுமார் 12.40 மணியளவில் இச்சந்திப்பு நிறைவடைந்தது .


குறித்த நிகழ்வில் Slmc இன் தலைவர் ரியாஸ் சவாஹிர்  , செயலாளர் சகோ நாளிர் நியாஸ்  மற்றும் உபதலைவர் ரம்சான் lantra ஆகியோரும் கலந்து கொண்டனர். 





No comments

Powered by Blogger.