கிளம்பி வந்து...
சிறுநீரகத்தின் செயல்பாடானது வியக்க வைக்கும் அளவுக்கு துல்லியமானது; ஆரம்பத்தில், சிறுநீரகத் தமனி வழியாக நமது சிறுநீரகங்களுக்கு இரத்தம் பாய்கிறது, அதிலிருந்து சின்னஞ்சிறிய நாளங்கள் வழியாக பிரிந்து சென்று, கழிவுகளில் இருந்து இரத்தத்தை சுத்திகரிக்கிறது. பி்ன்னர் மீண்டும் உடலுக்கு செலுத்துகிறது. சிறுநீரைப் பொறுத்தவரை, அது வடிகட்டப்பட்ட பி்ன்னர் நமது சிறுநீர்ப்பையில் சேமிக்கப்பட்டு, பி்ன்னர் முழுமையாக உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மருத்துவமனையில் ஒரு டயாலிசிஸ் அமர்வுக்கு மூன்று முதல் ஐந்து மணி நேரம் என வாரத்திற்கு மூன்று முறை டயாலிசிஸ் செய்யப்படுகிறது. இந்த செயல்முறையைத் தான் நமது சிறுநீரகம் ஒரு நாளைக்கு 36 முறை இயற்கையாகச் செய்து தருகிறது.
இது இப்படி இருக்க நமது டார்வினிஸ்டுகள், கிளம்பி வந்து இவைகள் யாவும் அடியும் நுனியும் தெரியாத, பகுத்தறிவற்ற தற்செயலின் வெளிப்பாடுகள் எனவும், காரண காரியம் இல்லாமல் கண்டபடி பரிணாம கண்ட உலகமெனவும் சிம்பிளாக சொல்விட்டு செல்கின்றனர்.
https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2
வட்சப்பில் இணைய.. 👆👆
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment