Header Ads



பாராளுமன்றத்தில் இன்றும் சலசலப்பு, ரிஸ்வியிடம் மன்னிப்பு கேட்ட சஜித் - அடம்பிடித்து நீக்கவைத்த அர்ச்சுனா


இன்றைய -06-  பாராளுமன்ற அமர்வுகளின் போது எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்திற்குப் புறம்பான மொழியைப் பயன்படுத்தியதாக ஆளும் கட்சி குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து சபையில் சலசலப்பு ஏற்பட்டது. 


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துணை சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் குறித்து தெரிவித்த கருத்துக்கு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 


"நீங்கள் துள்ளாமல் இருங்கள்" என்று பிரேமதாச கூறினார். 


இதையடுத்து "எதிர்க்கட்சித் தலைவர் தான் கூறியதைத் திரும்பப் பெற வேண்டும் அல்லது துணை சபாநாயகரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று ரத்நாயக்க கூறினார். 


இந்தக் கலந்துரையாடலில் இணைந்த பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர பயன்படுத்திய " bugger" என்ற வார்த்தை நீக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். 


"நேற்று நான் சொன்ன 'உங்களுக்கு வெட்கக் கேடு என்ற வார்த்தையை நீங்கள் நீக்கிவிட்டீர்கள். ஏன் பகர் என்ற வார்த்தையையும் நீக்கக்கூடாது," என்று எம்.பி. அர்ச்சுனா கூறினார். 


இதற்கு பதிலளித்த துணை சபாநாயகர், எம்பி ஜெயசேகர பயன்படுத்திய வார்த்தை நீக்கப்படும் என்று கூறினார். அதைத் தொடர்ந்து பிரேமதாச துணை சபாநாயகரிடம் தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.


"எனக்கு எந்த ஆணவமும் இல்லை. அதனால், நான் என் மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அவர் கூறுனார்.

No comments

Powered by Blogger.