திருடர்களுடன் இணைந்து, நாம் அடிபணிந்து செல்லனுமா..?
அரகலயவின் போது தமது சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதாகத் தெரிவித்து, ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவால் நட்டயீடு பெற்றுக் கொண்டவர்களின் பெயர் பட்டியல் வெளியாகிய நிலையில், அவ்வாறான திருடர்களுடன் இணைய வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
இரு கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து கதைத்துக் கொள்கிறார்கள். அது தொடர்பில் விமர்சிக்க நாம் விரும்பவில்லை.
ஆனால் நாம் கட்சியின் உறுப்பினர்கள்.மக்கள் எம்மிடத்தில் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் அல்லவா? எனவே இந்த கட்சிகள் இணையுமாயின் புதிய கூட்டணியின் தலைமை பதவி சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட வேண்டும்.
அதேபோன்று நாம் தொலைபேசி சின்னத்திலேயே களமிறங்க வேண்டும்.ஆனால் அதற்கு அவர்கள் விரும்ப மாட்டார்கள்.
நாம் அவர்களின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டுமா? ஐக்கிய மக்கள் சக்தி நாட்டின் பிரதான எதிர்க்கட்சி. 40 மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சி. எனவே நாம் அடி பணிந்து செல்ல வேண்டுமா?
சுயாதீனமாகவும் கௌரவமாகவும் நாம் எமது பயணத்தை முன்னெடுக்க வேண்டும். அதேபோன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலத்தை வழங்கிய மக்கள் தற்போது அதிருப்தி அடைந்துள்ளனர்.
நாட்டில் அரிசி தட்டுப்பாடு. நெல்லுக்கு போதுமான நிர்ணய விலை வழங்கப்படவில்லை. உப்பு இறக்குமதி செய்யப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
Post a Comment